12 ஏர்பஸ் விமானங்களை வாங்குகிறது குவாண்டாஸ் நிறுவனம் : 17,000 கி.மீ தூரத்தை, 20 மணி நேரத்தில் கடக்கும் விமான சேவை

0 2336

ர்வதேச விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலிய அரசின் குவாண்டாஸ் விமான சேவை நிறுவனம் தொலை தூர பயணங்கள் மேற்கொள்வதற்காக பன்னிரெண்டு A350-1000 ரக ஏர்பஸ் விமானங்களை வாங்க உள்ளது.

2025-ம் ஆண்டு இறுதியில், சிட்னி நகரில் இருந்து லண்டன் நகர் வரை, சுமார் 17,000 கிலோமீட்டர் தூரத்தை 20 மணி நேரத்தில் கடக்க கூடிய இடைநிறுத்தம் இல்லா விமான சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதற்காக நெதர்லாந்தின் Airbus SE நிறுவனத்திடம் இருந்து சுமார் 33,600 கோடி ரூபாய் மதிப்பில்  பன்னிரெண்டு A350-1000 ரக விமானங்களை வாங்க போவதாக குவாண்டாஸ் அறிவித்துள்ளது.

இது தவிர, 20 நடுத்தர ரக விமானங்களையும், 20 சிறிய ரக விமானங்களையும் அந்நிறுவனம் வாங்க உள்ளது. கடனில் சிக்கித் தவிக்கும் குவாண்டஸ் நிறுவனத்தை லாபத்தை நோக்கி நகர்த்துவதற்காக பழைய விமானங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments