ஜார்க்கண்டில் பணிக்கு தாமதமாக வந்ததாகக் கூறி பியூனுடன் பள்ளி முதல்வர் தகராறு : ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் காட்சி

0 2026

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளி ஒன்றில் அதன் முதல்வருக்கும், பியூனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் இருவரும் பரஸ்பரம் தாக்கிக் கொண்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

பலாமு மாவட்டதின் மெதினிநகர் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் கருணா சங்கர் என்பவர் முதல்வராக பணியாற்றி வருகிறார். அங்கு பியூனாக பணியாற்றும் ஹிமான்ஷு என்பவர் தாமதமாக பள்ளிக்கு வந்ததாகவும், தனது பணியை சரிவர செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து, ஹிமான்ஷுவிடம் கருணா சங்கர், கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது மோதலாக மாறியது.

பின்னர் அங்கிருந்த கம்புகளை எடுத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்தக் காட்சிகள் இணையதளத்தில் பரவும் நிலையில், கல்வி அதிகாரிகள் விசாரிப்பதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments