கத்திமுனையில் சிறுமி கடத்தப்பட்ட வழக்கு - சிறுமியின் உறவுக்கார தம்பதியினர் கைது

0 4125
கத்திமுனையில் சிறுமி கடத்தப்பட்ட வழக்கு - சிறுமியின் உறவுக்கார தம்பதியினர் கைது

நாமக்கலில் கத்திமுனையில் சிறுமி கடத்தப்பட்ட வழக்கில், சிறுமியின் உறவுக்கார தம்பதியினர் கைது செய்யப்பட்ட நிலையில், கடனை திரும்பக் கேட்டு சிறுமியின் பெற்றோர் தகாத வார்த்தைகளால் திட்டியதால், ஆத்திரம் தாங்காமல் கடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

லாரி ஓட்டுநர் சரவணன் - கௌசல்யா தம்பதியின் 11 வயது மகள் மவுலனிசாவை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கத்தி முனையில் தூக்கிச் சென்றனர். 50லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே குழந்தையை விடுவிப்போம் எனக் கூறி மிரட்டிய கடத்தல் கும்பல், திடீரென அலங்காநத்தம் பிரிவிலுள்ள பெட்ரோல் பங்க்கில் குழந்தையை விட்டுவிட்டு, கௌசல்யாவுக்கு தகவல் அளித்துவிட்டு தப்பிச் சென்றது.

போலீஸ் விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது கணவன் - மனைவியான மணிகண்டன் - பொன்னுமணி என்பது தெரியவந்தது. கௌசல்யாவின் உறவினர்களான இவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் 50ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கின்றனர்.

சொன்ன நாட்களுக்குள் பணத்தை கொடுக்க முடியாத சூழல் ஏற்படவே, கௌசல்யாவும், சரவணனும் சில மாதங்களாக பணத்தை திரும்பக் கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் அவர்களது மகளை கடத்தியதாக அந்த தம்பதியினர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments