ரயில் நிலையத்தில் கணவனை தாக்கிவிட்டு மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. 2 இளைஞர்கள் உட்பட 3 பேர் கைது

0 4751
ரயில் நிலையத்தில் கணவனை தாக்கிவிட்டு மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. 2 இளைஞர்கள் உட்பட 3 பேர் கைது

ஆந்திராவில் ரயில் நிலையத்தில் கணவனை தாக்கிவிட்டு மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாபட்லா மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான ஒரு தம்பதியினர், நேற்றிரவு வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது பேருந்து இல்லாததால் ரெபல்லே ரயில் நிலையத்தில் உறங்கியதாக கூறப்படும் நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த 3 பேர் கணவனை தாக்கி விட்டு அவரது மனைவியை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் பாதிக்கபட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் 2 இளைஞர்கள் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments