தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்.!
தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் துறைமுகத்தில் இருந்து அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் கன்வேயர் பெல்ட் மோட்டார் பழுதானதால், மொத்தமுள்ள 5 அலகுகளில் நான்கு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், 840 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சேலம் மாவட்டம் மேட்டூரில் செயல்படும் புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பழைய அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4ஆவது அலகில் மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இரண்டு அனல் மின் நிலையங்களிலும் சேர்த்து சுமார் 1,020 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
Comments