உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள சீன டயர்கள்

0 42875

உக்ரைனில் ரஷ்யப் படைகள் விரைவாக முன்னேறுவதற்கு தடையாக சீனாவின் டயர்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவின் கவச வாகனங்கள் உள்ளிட்ட போர் வாகனங்களில் தரம் வாய்ந்த டயர்களை பொருத்துவதற்கு பதிலாக சீனாவின் மலிவான டயர்களை ரஷ்ய ராணுவத்தின் ஊழல் அதிகாரிகள் வாங்கி பொருத்தியுள்ளனர். இதன் காரணமாக ரஷ்ய கவச வாகனங்கள் செல்லும் போது கடினமான நிலப்பரப்பு மற்றும் சேற்றில் சிக்கி கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் நீண்ட நாட்கள் வெய்யிலில் நிறுத்தும் போது டயர் கிழியவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உக்ரைன் படையினரோ நேட்டோ நாடுகள் வழங்கிய தரம் மிக்க வாகனங்களை பயன்படுத்துவதால் அவர்களால் எளிதில் முன்னேற முடிவதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments