நீட் தேர்வு- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

0 7728

 

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்படை நர்சிங் கல்லூரிகளில் B.Sc., நர்சிங் படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதையொட்டி, அந்த கல்லூரிகளில் நர்சிங் படிப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்க ஏதுவாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில்  வரும் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதனிடையே, நாடு முழுவதும் நீட் தேர்வை எழுத இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments