கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக தவறுதலாக வெறிநாய் கடி தடுப்பூசி.. நிகழ்வு குறித்து விசாரணைக்கு உத்தரவு

0 3113
கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக தவறுதலாக வெறிநாய் கடி தடுப்பூசி.. நிகழ்வு குறித்து விசாரணைக்கு உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

லக்கிம்பூர் கேரி அருகே உள்ள நயபூர்வா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வந்திருந்தார்.

ஏற்கனவே கோவின் தளத்தில் அவர் பதிவு செய்திருந்ததால், அதற்கான சான்றிதழை பெறுவதற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது, ஏற்கனவே அவருக்கு முதல் டோஸ் வெறிநாய் கடிக்கான மருந்து தவறுதலாக செலுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தடுப்பூசி போடப்பட்டவரின் உடல் நலத்திற்கு ஆபத்து இல்லை என்றாலும், நடந்த நிகழ்வு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments