துணை வட்டார வளர்ச்சி அலுவலரை காலணியால் தாக்கிய புகாரில் ஊராட்சி துணைத்தலைவர் கைது

0 3476
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை காலணியால் தாக்கிய புகாரில் ஊராட்சி துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை காலணியால் தாக்கிய புகாரில் ஊராட்சி துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.

கண்டமங்கலம் என்ற கிராமத்தில் காட்டுமன்னார்கோவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஊராட்சி வரவு செலவு கணக்கை படிக்கும்பொழுது, திடீரென எழுந்த ஊராட்சி துணைத்தலைவர் சரண்யா, துணை வட்டார வளர்ச்சி அலுவலரை காலணியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, தன்னை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், காலணியால் தாக்கியதாகவும் ரவிச்சந்திரன் அளித்த புகாரில், சரண்யாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments