அசாமில் சோதனை அடிப்படையில் மெத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை..
அசாம் மாநிலத்தில் சோதனை அடிப்படையில் மெத்தனால் கலந்த பெட்ரோல், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் தின்சுக்கியா மாவட்டத்தில் எம்15 பெட்ரோல் என்ற பெயரில் 15% மெத்தனால் கலந்த பெட்ரோல் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிரப்பு நிலையங்களில் விற்கப்படுகிறது.
மெத்தனாலை கலந்து பயன்படுத்துவது மூலம் பெட்ரோல் விலை உயர்வை ஓரளவு கட்டுக்குள் வைக்க முடியும் என்றும், கச்சா எண்ணெய் இறக்குமதியையும் கணிசமாக குறைக்க முடியும் என்றும் பெட்ரோலியத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி கூறியுள்ளார்.
ஏற்கனவே, சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மெத்தனால் கலந்த எரிபொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Comments