அமெரிக்காவின் ஆன்டோவர் நகரில் கடந்து சென்ற மிகப்பெரிய சூறாவளிக்காற்று..!
அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆன்டோவர் நகரில் மிகப்பெரிய சூறாவளி காற்று கடந்து சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
விச்சிட்டா நகருக்கு வெளியே 22 கிலோ மீட்டர் தூரத்தில் வீசிய அந்த சூறாவளி காற்று பல வீடுகளையும், கட்டிடங்களையும் சேதப்படுத்தியது.
மேலும் மின் இணைப்பு துண்டிப்பால் ஆயிரக்கணக்கானோர் இருளில் மூழ்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சூறாவளி, பட்லர் மற்றும் செட்விஜ் கவுண்டிகள் வழியே கடந்து செல்லும் போது பயங்கரமாக சுழன்று சென்றதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.
விச்சிட்டா நகரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் 50 முதல் 100 கட்டிடங்கள் வரை சேதமடைந்திருப்பதாக நகர மேயர் விப்பிள் தெரிவித்துள்ளார்.
Comments