அமெரிக்காவின் கான்சாஸ், நெப்ராஸ்கா மாகாணங்களை புரட்டிப் போட்ட சூறாவளிக் காற்று
அமெரிக்காவில் கன்சாஸ், நெப்ராஸ்கா மாகாணங்களில் வீசிய சூறாவளிக் காற்றால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து கட்டிடங்கள் சேதமடைந்தன.
Wichita நகருக்கு வெளியே Andover வழியாக விஸ்வரூபம் எடுத்த அந்த சுழற்காற்றில் சிக்கி வாகனங்கள், மரங்கள், வீடுகள் என அனைத்தும் துவம்சம் செய்யப்பட்டன. பட்லர், செட்விக் உள்ளிட்ட இடங்களில் சூறாவளிக் காற்று சுழன்று அடித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Comments