சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட செவிலியர் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே சட்ட விரோத கருக்கலைப்பால் செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லப்பைக்குடிக்காடைச் சேர்ந்த செவிலியரா ன வேளாங்கண்ணி என்பவர் நேற்று மாலை அத்தியூருக்கு சென்ற நிலையில், அவரது குழந்தைகளை மெடிகல் ஷாப் நடத்தி வரும் இளையராஜா என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது உங்கள் அம்மா வயிறு மற்றும் நெஞ்சு வலி காரணமாக தன்னிடம் சிகிச்சை பெற வந்ததாகவும், தற்போது மயங்கி கிடப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து 3குழந்தைகளும் அங்கு சென்று பார்த்த போது வேளாங்கண்ணி மேஜையில் படுத்த நிலையில் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது ஏற்கனவே உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து மனைவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கணவர் அளித்த புகாரின் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வேளாங்கண்ணியின் உடல் பிரேத பரிசோதனை ஆய்வில் கருக்கலைப்பு நடந்ததே அவரது உயிரிழப்பிற்கு காரணம் என முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து தலைமறைவான இளையராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் செவிலியர் அனுபவம் கொண்ட வேளாங்கண்ணி ஏன் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்டார் என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
Comments