ஈரோட்டில் பட்டப்பகலில் பெண் கழுத்து நெரித்து கொலை
ஈரோட்டில் பட்டப்பகலில் பெண் ஒருவர் மர்ம நபர்களால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈபிபி நகர் பிபி கார்டன் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற இளம்பெண் கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக 6 மாத காலமாக தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் அவரது வீட்டின் அருகில் உள்ளவர்கள் புவனேஸ்வரியை பார்க்க சென்ற போது அங்கு படுக்கை அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு வாயில் ரத்தம் கொட்டிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments