எரிபொருள், எரிவாயு இறக்குமதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு நிலவும் சிக்கல்

0 3344

எரிபொருள் மற்றும் எரிவாயுக்கு ரஷ்யாவை நம்பியுள்ள ஐரோப்பிய நாடுகள், ரூபிள் பணப் பரிமாற்றத்தால் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றன.

ரூபிளை கொண்டு எரிவாயு வாங்க ஒத்துக் கொள்ளாததால் போலந்து மற்றும் பல்கேரியாவுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்திய ரஷ்யாவின் நடவடிக்கையை அச்சுறுத்தலாக கருதுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2019ல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மொத்த எரிவாயு இறக்குமதியில் 41 சதவீதத்தை கொண்டிருந்த ரஷ்யா, சப்ளையை நிறுத்தினால் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட இறக்குமதி மூலம் எரிவாயுவை பூர்த்தி செய்யும் நாடுகளை பெரியளவில் பாதிக்கும் என்றும், குளிர்காலத்தில் எரிவாயு தேவை அதிகரிக்கும் நிலையில், ஐரோப்பிய நாடுகளின் நிலைமை மோசமடையும் என கருதப்படுகிறது.

அமெரிக்கா, சவுதியை அடுத்து 3-வது பெரும் எண்ணெய் உற்பத்தியாளராக உள்ள ரஷ்யா நாளொன்றுக்கு ஏற்றுமதி செய்யும் 50 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயில் பெரும் தொகையை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வந்தது.

ரஷ்யாவுக்கு மாற்றாக அஜர்பைஜான், துருக்கி, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எரிவாயு இறக்குமதி செய்யும் திட்டத்தில் பல்கேரியா இறங்கி உள்ளது. கத்தார், அல்ஜீரியா, நைஜீரியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் எரிவாயு இறக்குமதி செய்வதில் நடைமுறை சிக்கல் நிலவுவதால் ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments