மாநில மொழிகளை வழக்காடு மொழிகளாக கொண்டு வருவதில் சிக்கல்-தலைமை நீதிபதி என்.வி.ரமணா
மாநில மொழிகளை வழக்காடு மொழிகளாக கொண்டு வருவதில் சிக்கல்களும், தடைகளும் உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இது குறித்து பேசிய அவர், தலைமை நீதிபதிகள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பது, அவர்களுக்கு மாநில மொழி தெரியாதது போன்ற காரணங்களால் வழக்காடு மொழி குறித்த சிக்கல் உள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், மொத்த உத்தரவையும் உள்ளூர் மொழிக்கோ அல்லது, உள்ளூர் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கோ மொழிப்பெயர்ப்பதற்கான தொழில்நுட்பமோ அமைப்போ இல்லை என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தான் வழி என குறிப்பிட்ட அவர், அதற்கு இன்னும் காலம் இருப்பதாகவும் கூறினார்.
Comments