வனப்பகுதியில் இருந்து வெளியேறி வீடு ஒன்றிற்குள் புகுந்து துள்ளித்திரிந்த மான்.. வலை வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விடுவிப்பு
ஆந்திராவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான் ஒன்று, வீடு ஒன்றுக்குள் புகுந்துகொண்டு வெளியேறத் தெரியாமல் தவித்தது.
நெல்லூர் மாவட்டத்தில் உள்ள இந்துகூறுபேட்டா கிராமத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான், வழிதவறிச்சென்று ஒருவரது வீட்டிற்குள் புகுந்தது.
வீட்டு உரிமையாளர் அக்கம் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அதனை வெளியே துரத்த முயன்ற போது வெளியேறத் தெரியாமல் அது மிரண்டு வீட்டிற்குள்ளேயே சுற்றித்திருந்து பொருட்களை சேதப்படுத்தியது.
வனத்துறைக்கு தகவல் தெரிவித்த போதும், யாரும் வராததால் அப்பகுதியினரே இணைந்து மானை வலை வைத்து பிடித்துச்சென்று வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.
Comments