முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற இருசக்கர வாகனம்.. எதிரே வந்த வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டு 3 பேர் பலி..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற இருசக்கர வாகனம் மீது, எதிரே வந்த வேன் மோதி தூக்கி வீசியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொரப்பாடியில் இருந்து 3 பேர் செங்கத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அம்மாபாளையம் அருகே முன்னால் சென்ற வாகனம் ஒன்றை அவர்கள் முந்த முயன்றனர் என்று கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த சுற்றுலா வேன் மீது இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி தூக்கி வீசப்பட்டது. அதே நேரம் சுற்றுலா வேனும் நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வேனில் வந்த 15க்கும் மேற்பட்டோர் லேசாகக் காயமடைந்தனர்.
Comments