கொரோனாவை விடக் கொடிய தொற்றாக குழந்தைகள் மனதைக் கெடுத்துக் கொண்டுள்ளனர் - உயர்நீதிமன்றம் வேதனை
ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்வது குறித்து வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம், அதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.
17 வயதுச் சிறுமியைக் கர்ப்பமாக்கியதாக 15 வயதுச் சிறுவனுக்கு திருவள்ளூர் சிறார் நீதி குழுமம் 3 ஆண்டு தண்டனை விதித்த நிலையில், அதனை எதிர்த்து சிறுவன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன் விசாரணையில், கொரோனா ஊரடங்கு காலத்தில், டிவி, மொபைல்களில் மூழ்கிய குழந்தைகள், கொரோனாவை விட கொடிய தொற்றாக மனதை கெடுத்துக் கொண்டுள்ளனர் என நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், பதின்ம வயது குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Comments