சென்னை மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து மாற்றம்

0 10299

சென்னை புழுதிவாக்கம் முதல் மடிப்பாக்கம் வரை உள்ள பகுதியில் மெட்ரோ ரயில் தூண் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், அப்பகுதியில் மே 2ஆம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகர பேருந்துகள், கனரக வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவை வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். சாலை, பழைய மேடவாக்கம் சாலை, சபரி நகர் சாலை வழியே ஆக்சிஸ் வங்கி சந்திப்பு வந்தடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைப்பட்ட பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் பாலாம்பிகை நகர் சந்திப்பில் இருந்து சென்று எம்.ஆர்.டி.எஸ். சாலையில் இணைந்து சர்வீஸ் சாலை வழியாக மேடவாக்கம் சாலை சந்திப்பை அடையலாம் என்றும் போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments