வனப்பகுதிகளை அழிக்க நினைப்பது மனித அழிவுக்கு வழிவகுக்கும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
வனப்பகுதிகளை அழிக்க நினைப்பது மனித அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இயற்கையை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஸ்ரீமதி, இயற்கையான சூழல் என்பதே மனிதனின் அடிப்படை உரிமை என்றார்.
பல்லுயிர் பெருக்கம், ரியல் எஸ்டேட், சுரங்கங்கள் மற்றும் அணைகள் கட்டுவது ஆகியவற்றுக்காக காடுகள் அழிக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்தியாவில் 5சதவீதம் வனப்பகுதிகள் மட்டுமே சுற்றுச்சூழலியல் பகுதியாக, வனவிலங்குகளின் வாழிடமாக உள்ளது எனவும் இந்த ஐந்து சதவீத வனப்பகுதியே மீதமுள்ள 95சதவீத பகுதியில் வசிக்கும் உயிரினங்களுக்கான இயற்கை சூழலை சமப்படுத்தி கொடுக்கிறது எனவும் கூறிய நீதிபதி அவற்றையும் அழிக்க நினைப்பது மனித குலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தார்.
Comments