திமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது... நண்பர்களே கூலிப் படை வைத்து கொன்றது அம்பலம்

0 4716

சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கில் திமுக துணை வட்டச் செயலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். உடனிருந்த நண்பர்களே கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மடிப்பாக்கத்தில் திமுக பிரமுகர் செல்வம் என்பவரை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. அவரது மனைவி சமீனா நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக போலீசார் தேடி வந்தனர். செல்வம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததால் தொழிற் போட்டியால் கொலை செய்யப்பட்டாரா, முன்விரோதம் காரணமாக கொலைச் செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி கொலை செய்த கிஷோர் உள்ளிட்ட கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மீதமுள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தநிலையில் அருண் என்ற கூலிப்படையை சேர்ந்த மற்றொரு கூட்டாளியுன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அடுத்த சிலநாட்களில் சரண் அடைந்தார்.

இந்த கூலிப்படைத் தலைவனான வியாசர்பாடியைச் சேர்ந்த முருகேசனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கூலிப்படை சிக்கியும் ஏவியவர்கள் யார் என தெரியாமல் போலீசார் தவித்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் தனிப்படை போலீசார் ரவுடி முத்துசரவணனை வேறொரு வழக்கில் பிடித்து விசாரிக்க மடிப்பாக்கம் செல்வம் கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது.

முத்துச் சரவணன் கொடுத்த தகவலில் பெரியபாளையத்தைச் சேர்ந்த ரவுடி தனிகா மற்றும் கௌதம் ஆகியோர் மூலமாக பணம் கைமாறியது தெரிய வந்தது.

அதன்படி பெரம்பூரில் இருந்த கௌதமை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது மடிப்பாக்கம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ரமேஷ், மூலமாக தனிகாவிடம் கைமாறியதாகவும், அவர் கூறியதின் பேரில் கூலிப்படை தலைவன் முருகேசன் மூலமாக இந்த கொலையை நடத்தியதும் தெரியவந்தது..

உடனடியாக புரட்சி பாரதம் செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் ரவி என்கிற ரமேஷை கைது செய்த போலீசார் அவன் கொடுத்த தகவலின் படி திமுக வட்டச் துணை செயலாளர் குட்டி என்ற உமா மகேஸ்வரன், திமுக மீனவர் அணியை சேர்ந்த சகாய டென்ஸி , ஜெயமுருகன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

செல்வத்தால் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக அனைவரும் ஏமாற்றப்பட்டதாகவும், இதனால் திட்டம் போட்டு கூலிப் படை மூலம் செல்வத்தை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கட்டங்களாக 40 லட்ச ரூபாய் பணத்தை கைமாற்றி கூலிப்படை மூலம் செல்வத்தை கொலை செய்ததாக அனைவரும் கூறினர்.

முருகேசன் தலைமையில் வியாசர்பாடியை சேர்ந்த கிஷோர், அருண், கண்ணகி நகரை சேர்ந்த லைன் மணி உள்ளிட்ட 10 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் பள்ளிகரணை பகுதியில் அறை எடுத்து தங்கி செல்வத்தின் நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர்.

போலி சிம்கார்டுகள், பட்டன் செல்போன்கள் வாங்கிய குட்டி, ரமேஷ், உள்ளிட்ட நான்கு பேரும் செல்வத்தின் நடவடிக்கை குறித்து முருகேசனுக்கு தகவல் அளித்துள்ளனர்.

செல்வத்தை கொலை செய்ய எடுத்த இரு முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. முதல் முறை திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் முருகேசனே நேரடியாக இறங்கி கொலை செய்ய முயன்ற நிலையில் அதிக கூட்டம் காரணமாக முடியாமல் போய் உள்ளது.

மற்றொரு முறை நிகழ்ச்சி ஒன்றில் கட்சி நிர்வாகிகள் போல கலந்து கொண்டு கொலை செய்ய முயன்ற நிலையில், அமைச்சர் மா.சுப்பரமணியன் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அப்பொழுதும் தடைபட்டுள்ளது.

இதையடுத்து ஒருவாரம் கழித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் செல்வத்தின் மனைவிக்கு சீட் கிடைக்கும் என தகவல் வெளியான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நால்வரும் மாலை அணிவித்து வாழ்த்துவது போல் சென்று கொலை செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments