தேஜாஸ்ரீக்கும், வைரமுத்துவுக்கும் என்ன பிரச்சனை தெரியுமா.? தமிழுக்காக மல்லுக்கு நிற்கிறார்..!
குழந்தைகளுக்கு இருளாண்டி, ஒச்சாயி என்று தமிழில் பெயர் வையுங்கள் என்றும் அஜய் தேவ்கான், தேஜாஸ்ரீ என்று வேற்று மொழியில் பெயர் வைக்க கூடாது என்றும் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் தமிழ் இயக்கம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் 132வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்
வடநாட்டு கலைஞர்கள் இந்திதான் தேசிய மொழி என கூறி வருகின்றனர் அவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை, இந்தி பேசுபவர்கள் மட்டும் தான் இந்தியா என்றால் இந்தி உங்கள் தேசிய மொழியாக இருந்து விட்டு போகட்டும், இது பன்முக கலாச்சாரமும் பல்வேறு தேசிய இனங்களையும் உள்ளடக்கி தைக்கப்பட்ட தேசம் என்று குறிப்பிட்ட வைரமுத்து
ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றோ, பொது மொழி என்றோ பொதுவெளியில் இந்த கருத்தை யாரும் முன் வைக்கக் கூடாது என்றார்.
இந்தியா முழுவதும் தாய்மொழி என்ற உணர்வு கொழுந்து விட்டு எரிவதற்கு, முழு முதற்காரணம் தமிழர்கள், தமிழியக்கம் என்ற வைரமுத்து நாம் அனைவரும் குழந்தைகளுக்கு இருளாண்டி, ஒச்சாயி போன்ற அழகிய தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் என்றும் அஜய்தேவ்கான், தேஜாஸ்ரீ போன்ற வேற்று மொழியில் பெயர் சூட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்
Comments