6 ஆண்டுகளுக்கு பின் மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாடு.!

0 2076

மாநில முதலமைச்சர்கள், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் கலந்து கொள்ளும் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கலந்து கொள்ளும் கூட்டு மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

நீதித்துறை எதிர்கொள்ளும் முக்கியச் சவால்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.

நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, நீதித்துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்புவது, வழக்குகளை துரிதமாக முடிப்பது, சட்ட உதவி சேவை, உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளன.

25 உயர் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு, மேம்பாடு, பராமரிப்பு, திட்டமிடல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தலைமை நீதிபதி தலைமையிலான தேசிய நீதித்துறை உள்கட்டமைப்பு ஆணையத்தை அமைப்பது குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இதுதொடர்பாக ஏற்கனவே அரசுக்கு பரிந்துரைத்திருந்தார்.

மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

மாநில முதலமைச்சர்கள் பங்கேற்காத நிலையில், அரசின் சார்பில் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments