சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த காதல் ஜோடி...திருடர்கள் என நினைத்து கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்!

0 3639

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த காதல் ஜோடியை, திருடர்கள் என நினைத்து பொதுமக்கள் கட்டிவைத்து அடித்து உதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அப்பகுதியில் கடந்த சில தினங்களாக செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாகவும் இதனால் மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆர்.சி தெருவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு ஜோடி அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்துள்ளனர்.

அவர்களை திருடர்கள் என நினைத்த பொதுமக்கள், ஒன்று திரண்டு இருவரையும் கோவில் கொடி மரத்தடியில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் இருந்து அந்த காதல் ஜோடியை மீட்டனர்.

தாக்குதலில் காயமடைந்த அந்த ஜோடியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர்கள் யார்? எதற்காக இந்த பகுதிக்கு வந்தனர் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments