இந்திய மாணவர்கள் சீனாவில் தங்கள் கல்வியைத் தொடர சீன அரசு அனுமதி.!
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மாணவர்கள், சீனாவில் தங்கள் கல்வியைத் தொடர சீன அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்திய மாணவர்கள், சீனாவின் பல்வேறு இடங்களில், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளை பயின்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் சீனாவிலிருந்து, 2 ஆண்டுகளுக்கு முன் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பிய நிலையில், தொற்று குறைந்ததை அடுத்து அவர்கள் சீனா திரும்ப விசா உள்ளிட்ட அனுமதி கிடைக்கவில்லை.
எனினும், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சீனா அனுமதி அளித்தது.
இந்நிலையில், கடந்த வாரம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நிலையில், இந்திய மாணவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
Comments