அமெரிக்காவில் முதல் முறையாக ஒருவருக்கு H5 வகை வைரஸ் தொற்று உறுதி.!

0 2860

அமெரிக்காவில் முதல் முறையாக கொலராடோவில் வசிக்கும் ஒருவருக்கு பறவைகளில் காய்ச்சலை உண்டாக்கும் H5 வகை வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள அமெரிக்க நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமான சிடிசி, தொற்று பாதித்த நபர் தனது கோழிப்பண்ணையில் H5N1 வைரஸ் தொற்றால் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான கோழிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சமயத்திலேயே அவருக்கு H5 வைரஸ் தொற்று பரவியிருக்க கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அந்த நபர் குணமடையும் வரை, சில நாட்களுக்கு அவருக்கு உடல் சோர்வு அறிகுறி மட்டுமே இருந்ததாகவும், அவரை தனிமைப்படுத்தி ஒசெல்டமிவிர் எனப்படும் வைரஸ் எதிர்ப்பு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் சிடிசி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments