இஸ்ரோவின் 'ககன்' நேவிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரையிறங்கிய முதல் விமானம்!

0 3093

இஸ்ரோ உருவாக்கியுள்ள 'ககன்' நேவிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதன்முறையாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

வானில் பறக்கும் விமானங்களின் துல்லியமான இருப்பிடம் முதல், செல்போனில் உள்ள கூகுள் மேப் வரை அமெரிக்காவின் ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

GPS தொழில்நுட்பம் முற்றிலுமாக அமெரிக்காவின் ராணுவ  கண்டுபிடிப்பு என்பதால் அதனை செயலிழக்கசெய்வதற்கான உரிமை அமெரிக்காவிற்கு இருக்கின்றது.

இந்நிலையில், சொந்தமாக நேவிகேஷன் தொழில்நுட்பத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டதன் விளைவாக IRNSS மற்றும் ககன் போன்ற தொல்நுட்பங்களை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

இதற்கான  பிரத்யேக செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ அனுப்பியுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கார் விமான நிலையத்தில் இண்டிகோ ATR-72 விமானம் ககன் தொழிநுட்பத்தை பயன்படுத்தி தரையிறங்கியது.

இந்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் விமான தாமதமாகும் நேரம் குறையும் எனவும், எரிபொருள் சிக்கனம் மற்றும் விமான பாதுகாப்பு மேம்படும் எனவும்  விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments