2,800 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டெடுப்பு

0 4071

கர்நாடகத்தில் 2 ஆயிரத்து 800 ஆண்டு பழமையான கல்லால் செய்யப்பட்ட கல்லறை கண்டறியப்பட்டுள்ளது.

தக்சின கன்னட மாவட்டத்தின் ரமாகுஞ்சா கிராமத்தில் முந்திரி தோட்டம் ஒன்றில் கண்டறியப்பட்டுள்ள இந்த கல்லறை, கி.மு.800-ஆம் ஆண்டில் செய்யப்பட்டதாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட பண்டை காலத்து கல்லறைகளை அடையாளப்படுத்த அதன் மேல் வழக்கமாக குத்துக்கல் அல்லது கற்களால் ஆன சின்னங்கள் வைக்கப்படும் நிலையில்,  முதன்முறையாக கல்லறையின் மேல் பகுதியில் அடையாளத்துக்காக வட்ட வடிவிலான ஒரு சின்னம் பெருங்கல் மீது நேர்த்தியாக பொறிக்கப்பட்டுள்ளதாக  கூறியுள்ளனர்.

இதன் மூலம் இந்தியாவில் 2 ஆயிரத்து 800 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பூஜ்ஜியத்தை பற்றி அறிந்திருந்தனரா? அல்லது  பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தனரா? போன்ற மர்மமான கேள்விகள் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments