நிலவில் ஆய்வு மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ள கையடக்க "ரோபோ"
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஜப்பானில் வடிவமைக்கப்பட்டுள்ள பந்து வடிவிலான ரோபோ பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனம் மற்றும் டாமி என்ற பொம்மை தயாரிப்பு நிறுவனத்தால் இந்த கையடக்க ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. 4 அங்குல விட்டமும், 250 கிராம் எடையும் கொண்ட இந்த ரோபோ, சூழ்நிலைக்கு தகுந்தார் போல் உருவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையது.
சோரா-கியூ என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, நிலவில், மைனஸ் 170 டிகிரி குளிர் வரை தாங்கும் வகையில், அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கால் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவின் மணல் தரையில் பயணிக்க ஏதுவாக 2 சக்கரங்கள் மற்றும் புகைப்படம் எடுப்பதற்காக 2 கேமராக்கள் இதில் பொறுத்தப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு நிலவிற்கு அனுப்பப்படும் செயற்கை கோளுடன் சேர்த்து அனுப்பப்படும் இந்த ரோபோ, செயற்கை கோள் தரையிறங்கும் காட்சிகள் மற்றும் நிலவின் புகைப்படங்களை படம் எடுத்து பூமிக்கு அனுப்ப உள்ளது.
Comments