மதம் மாறி லவ்..! ஆசை தீர்ந்ததும் துபாய்க்கு ஓட்டம்..! கர்ப்பிணியாக தவிக்கும் மலேசிய பெண்..!
முகநூல் மூலம் மலேசிய பெண்ணை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்திய இளைஞர் ஒருவர், மதம் மாறியதாக போலி ஆவணங்களை காண்பித்து கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு அந்தப்பெண் கர்ப்பிணியானதும் ஏமாற்றிவிட்ட சம்பவம் நெல்லையில் அரங்கேறி உள்ளது.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் ஒருவர் குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது மகள், தன்னை நெல்லை டவுன் சிக்கந்தர் தெருவைச் சேர்ந்த இம்ரான் என்பவர் காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சில தினங்களுக்கு முன்பு டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார் .
இம்ரான் மலேசியாவில் வேலை பார்த்த போது, தனது தோழி திருமணத்தில் வைத்து இருவரும் அறிமுமாகி பின்னர் பேஸ்புக் மூலம் இம்ரான் அந்தப் பெண்ணுடன் பழகி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். தான் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கூறியதோடு தனது பெயர் அருண்குமார் எனவும் இம்ரான் கூறிஉள்ளார். ஆனால் அவரிடம் பழகிய பிறகுதான் அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதை அந்தப்பெண் கண்டறிந்துள்ளார்.
இதுகுறித்து கேட்டபோது தான் இந்துவாக மதம் மாறி திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிய அவர், தனது பெயரை தருண் என பெயர் மாற்றிக் கொண்டு இந்து மதத்திற்கு மாறியதாக கூறி போலியான சான்றிதழ்களை காண்பித்து நம்பவைத்து திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சி உள்ளார். அதை நம்பி கடந்த 2019 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தை பதிவு செய்ய கூறியபோது துபாயில் முக்கிய வேலை இருப்பதாக கூறி அந்தப்பெண்ணை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பிறகுதான் அவர் போலியாக மதம் மாறி பெயர் மாற்றம் செய்ததும் பிறப்பு சான்றிதழ் முதல் பல்வேறு சான்றிதழ்களை போலியாக தயாரித்ததும் தெரியவந்தது.
தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ள அந்தப்பெண் இதுகுறித்து கேட்டபோது பணத்திற்காக தான் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறி, தன்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும், வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி மேற்கொள்வதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.
இந்த மனுவின் அடிப்படையில் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இம்ரான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட இம்ரான் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியதால் போலீசார் சென்று அழைத்து வந்தனர்.
போலீசார் அவரிடம் விசாரித்துக் கொண்டிருந்த போது இம்ரானுக்கு ஆதரவாக வந்தவர்கள் அவரை மீட்டு அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இம்ரான் இன்னும் கைது செய்யப்படாத நிலையில் கர்ப்பிணியாக தவிக்கும் அந்தப்பெண் தனக்கு நீதி கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். தன்னிடம் 14 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாகவும், தன்னைப் போன்று பல பெண்கள் அவரிடம் ஏமாந்திருப்பதால் இம்ரானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்
முகநூல் என்ற முட்டுச்சந்தில் பழகி , காதல் வலையில் விழுந்தால் முகவரி இல்லாமல் முச்சந்தியில் தவிக்க நேரிடும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்..!
Comments