உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன்

0 5146

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தாய் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை இறந்துவிட்டதாக கூறிய கணவர், உயிருடன் இருக்கும் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து அதை காட்டி மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஷ்சிவகங்கை மாவட்டம் கண்டாங்கிப்பட்டியை சேர்ந்த பாலகிருணாவுக்கும், மதுரை அழகாபுரியைச் சேர்ந்த மோனிகாவுக்கும் திருமணமாகி 3 வயதில் மகன் உள்ளான். இந்நிலையில் நாள்தோறும் குடித்து விட்டு பாலகிருஷ்ணன் அடித்து துன்புறுத்துவதாக மோனிகா அளித்த புகாரில், போலீசார் தலையீட்டு பாலகிருஷ்ணனை எச்சரித்து எழுதி வாங்கி உள்ளனர்.

மீண்டும் தம்பதியிடையே சண்டை ஏற்பட்ட நிலையில், மோனிகா கோபித்துக் கொண்டு மகனுடம் தாய் விட்டுக்குச் சென்று உள்ளார்.

தாய் வீட்டுக்கு சென்ற மனைவியை இறந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த பாலகிருஷ்ணன் அதை காட்டி மற்றொரு பெண்ணை திருமணம் செய்து அதை பேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மோனிகா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments