2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகிறது பா.ஜ.க
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் பா.ஜ.க. தீவிரமாக இறங்கி உள்ளது. நாடு முழுவதும் மூன்று கட்டங்களாக பிரசாரக் கூட்டங்களை நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் பலவீனமாக கருதப்படும் வாக்குச் சாவடிகளை பலப்படுத்த சிறப்பு குழுவை பா.ஜ.க. அமைத்துள்ளது. தேசிய அளவிலான பிரசாரக் கூட்டத்தை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா விரைவில் தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது. மூன்று மாதங்கள் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடியின் திட்டங்கள் குறித்து பிரசாரத்தில் ஈடுபட பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ள பொதுக் கூட்டங்களில் கட்சியின் எம்.பி.க்கள், மாநில மற்றும் மாவட்டத் தலைவர்கள் முக்கிய பங்காற்ற உள்ளனர்.
முதற்கட்டமாக உறுப்பினர்களை அணிகளாக பிரித்து, எந்தெந்த வாக்குச் சாவடிகளை பலப்படுத்த வேண்டும் என கண்டறிந்து மக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்வது என மூன்று கட்டங்களாக தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments