தாரமங்கலம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தாத அரசு அதிகாரிகள்.. உத்தரவிட்ட பிறகும் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

0 2856
உத்தரவிட்ட பிறகும் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தாத அரசு அதிகாரிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ளது.

உத்தரவிட்ட பிறகும் சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தாத அரசு அதிகாரிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடுத்துள்ளது.

தாரமங்கலம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, குடிநீர் குழாய் அமைக்க ஆட்சியருக்கு  உத்தரவிடக்கோரி சக்திவேல் என்பவர் கடந்த ஆண்டு உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியிருந்தார்.

அக்கடித்தை பொது நல வழக்காக எடுத்து நீதிமன்றம் விசாரித்த நிலையில், தாரமங்கலத்தில் குடிநீர் வசதிக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உத்தரவாதத்தின்படி குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை என சக்திவேல் மீண்டும் கடிதம் எழுதியதை அடுத்து,எதிர்மனுதாரர்களான அரசு அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments