பிடித்தம் செய்த ஊதியத்தை வாங்கி தர மறுத்ததால் ஸ்விகி இன்ஸ்டாமார்ட் நிறுவன மேலாளரை தாக்கிய முன்னாள் ஊழியர்கள்..!
சென்னையில் வீடுகளுக்கு மளிகைப் பொருட்கள் டெலிவரி செய்யும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவன கிடங்கு மேலாளரை தாக்கிய முன்னாள் ஊழியர்களை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.
செல்போன் மூலம் ஆர்டர் செய்தால் இன்ஸ்டாமார்ட், வீட்டிற்கே பொருட்களை டெலிவரி செய்கிறது. இதற்காக பல இடங்களில் பொருட்கள் சேமித்து வைக்க கிடங்குகளை அந்நிறுவனம் அமைத்துள்ளது.
அந்த வகையில் சென்னை அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் செயல்படும் கிடங்கு ஒன்றில் வேலை செய்த ஹரிஷ் மற்றும் ஏஜஸ் ஆகியோர் சில பொருட்களை திருடியதாகவும் அதனால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த கிடங்கின் உதவி மேலாளர் புகழேந்தியை இருவரும் கிடங்கிற்குள் புகுந்து தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.
Comments