சனிக்கிழமையில் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் - சட்டப்பேரவையில் அறிவிப்பு
அலுவலகங்களில் பணியாற்றுவோரின் வசதிக்காக சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்றும் பத்திரப்பதிவுக்கு கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அறிவிப்புகளை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டார். அவசர நிமித்தமாக பதிவு செய்ய விரும்புபவர்களின் வசதிக்காக ஆவணப் பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் தட்கல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரி பகுப்பாய்வு, வரி ஏய்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக வரி ஆய்வுக்குழு அமைக்கப்படும் என்றும் திருமண சான்றுகளில் திருத்தம் செய்ய இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சனிக்கிழமை பணி நாளை ஈடுசெய்ய வார நாட்களில் வேலை குறைந்த ஏதேனும் ஒரு நாளில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களுக்கு விடுப்பு வழங்க ஏதுவாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments