புவியை அச்சுறுத்தும் குறுங்கோள்களைத் தாக்கி அழிக்க சீனா திட்டம்.!
புவியை நோக்கி வரும் குறுங்கோள்களைக் கண்டுபிடித்துத் தாக்கி அழிக்கும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருவதாகச் சீன விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
புவியையும் மனித இனத்தையும் காக்கும் முதன்மையானதாக இந்த அமைப்பு இருக்கும் எனச் சீன விண்வெளி அமைப்பின் துணைத் தலைவர் ஊ யான்குவா தெரிவித்துள்ளார்.
புவிக்கு அச்சுறுத்தலாக 2025ஆம் ஆண்டு அதை நெருங்கும் குறுங்கோளை இடைமறித்துத் தாக்குவது தான் முதல் இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
குறுங்கோளின் வேகம், தொலைவு அது புவியை நெருங்கும் நேரம் ஆகியவற்றைக் கண்டறிந்து அதைத் தாக்குவதற்கான வாய்ப்பு, ஒத்திகை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மென்பொருளையும் இந்த அமைப்பு கொண்டிருப்பது இதன் சிறப்புக் கூறாகும்.
Comments