கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு..
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மேலும் 10 ரூபாய் உயர்ந்து கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கோடை விளைச்சல் குறைந்துள்ளதால் வரத்து குறைந்து நேற்று 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது.
வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 80 லாரிகள் மூலம் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து தக்காளி கொண்டுவரப்படும் நிலையில், தற்போது 40 லாரிகள் மட்டுமே வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments