தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து அம்மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாளை சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி, நெல்லை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30, மே 1 ஆகிய நாட்களில் தென் தமிழகம் மற்றும் வட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என கணித்துள்ள வானிலை மையம், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
Comments