வெளிநாடுகளுக்குப் பாமாயில் ஏற்றுமதி செய்யத் தடை விதித்தது இந்தோனேசியா.. உலக நாடுகளில் சமையல் எண்ணெய் விலை மேலும் உயரக் கூடும்..!
இந்தோனேசியாவில் வெளிநாடுகளுக்குப் பாமாயில் ஏற்றுமதிக்கு விதித்த தடை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. உலக நாடுகளில் சமையல் எண்ணெய் விலை ஏற்கெனவே கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் உள்நாட்டில் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், தட்டுப்பாடு ஏற்படாத வகையில் வழங்கலை உறுதி செய்யவும் பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தெரிவித்துள்ளார்.
27 கோடி மக்களின் எண்ணெய்த் தேவையை நிறைவு செய்வதற்கே அரசின் முதல் முன்னுரிமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் பாமாயில் உற்பத்தியில் 60 விழுக்காட்டைக் கொண்டுள்ள இந்தோனேசியா அதில் மூன்றில் ஒருபங்கை உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்துகிறது.
பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ளது மீண்டும் உலக எண்ணெய்ச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
Comments