தொலைத்தொடர்பு நிறுவன பெண் ஊழியர் தற்கொலை வழக்கில் திருப்புமுனை.. ஆன்லைனில் ரம்மிக்கு அடிமையாகி ரூ.1.75 கோடி இழந்தது கண்டுபிடிப்பு
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட ஒன்றே முக்கால் கோடி ரூபாய் கடனே காரணம் என போலீசார் துப்பு துலக்கி உள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் பிஜிஷா தற்கொலை செய்து கொண்ட நிலையில் சந்தேக மரணம் என உறவினர்கள் அளித்த புகாரில் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையில் ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான பிஜிஷா 35 சவரன் நகையை பணயமாக வைத்து விளையாடி உள்ளனர்.
தொடர் தோல்விகளால் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வரை கடனாளியாக மாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments