பிரதமர் மோடி இன்று அஸ்ஸாம் பயணம்.. புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

0 2256
பிரதமர் மோடி இன்று அஸ்ஸாம் பயணம்.. புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி இன்று அஸ்ஸாமில் ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் 7 புதிய மருத்துவமனைகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

காலை 11 மணிக்கு கார்பி ஆங்லாங் மாவட்டத்தில் திப்பு என்ற இடத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு, நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக பிரதமர் அலுவலகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். சுமார் 500 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படும் இத்திட்டங்களால் அந்த மாவட்டத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments