ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று நிலுவை எனத் தகவல்

0 1993

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று மருத்துவமனைக்கு கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

சேமிப்பு கிடங்கு அமைந்திருந்த கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் துரித நடவடிக்கையின் மூலம் நோயாளிகள் வெளியேற்றப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மருத்துமனைக்கு தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று கிடைக்கவில்லை என்றும், கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரிகள் ஆய்வு செய்த போதும் சான்றிதழ் வழங்குவது நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தை இடித்து விட்டு 40 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்க திட்டமிட்ட நிலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments