பீஜிங்கிலும் ஊரடங்கா? - மக்கள் அச்சம்.. அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பு வைக்கும் முனைப்பில் மக்கள்
சீனாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கியது. ஷாங்காய் நகரை தொடர்ந்து பீஜிங்கிலும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
ஏறத்தாழ 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தலைநகர் பீஜிங்கில் புதிதாக 46 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பீஜிங்கிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற அச்சத்தில் தேவையான பொருட்களை வாங்கிக் குவிக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் தேவையான பொருட்களை கையிருப்பு வைக்கப்படுவதை கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments