வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் அகற்றம்.. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை

0 3385
வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் அகற்றம்.. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நடவடிக்கை

உத்தரப்பிரதேசத்தில் வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன.

வழிபாட்டுத்தலங்களில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மக்களுக்கு இடையூறாக இருப்பதாக வந்த புகாரையடுத்து அவற்றை முறைப்படுத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு வழிபாட்டுத்தலங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை அதிகாரிகள் அகற்றினர்.

அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்து மற்றும் முஸ்லீம் மதத் தலைவர்கள் ஏகமனதாக ஒலிபெருக்கியின் ஒலியைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளனர். மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணஜன்ம பூமியில் உள்ள ஒலிபெருக்கி கடந்த 20ம் தேதி அகற்றப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments