பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
பாஜக அல்லாத மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்து மக்களின் சுமைகளைக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர்களுடன் நேற்று காணொலியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது, தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் , மகாராஷ்ட்ரா , ஆந்திரா ,தெலுங்கானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
எரிபொருள் மீதான கலால் வரியை கடந்த ஆண்டு நவம்பர் மாதமே மத்திய அரசு குறைத்து விட்டதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் சில மாநில அரசுகள் மட்டுமே பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியைக் குறைத்தன என்று பிரதமர் கூறினார். பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைத்து அதன் பலனை மக்களுக்கு மாநில அரசுகள் கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
Comments