தீ விபத்துக்குள்ளான இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 80 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடம் என்பதால் அவசரகால வழிகள் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தகவல்
சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் 83 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் அதனால் அக்கட்டிடத்தில் அவசர கால வழிகள் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீவிபத்து ஏற்பட்ட அறுவை சிகிச்சைப் பிரிவு மற்றும் அருகிலிருந்த கட்டிடமான நரம்பியல் பிரிவு ஆகியவை கட்டிட ஆவணங்களின் படி 1939 ஆம் கட்டப்பட்டுள்ளன. இந்த இரு கட்டிடங்களிலும் சுமார் 6 அவசர வழிகளாவது ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு இக்கட்டிடங்களில் பொருத்தப்பட்ட தீத்தடுப்பு தண்ணீர் குழாய் மூலம்தான் பெருமளவு தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜிவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் தேதி தீயணைப்புத்துறையிடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளது. பிப்ரவரி 22ஆம் தேதி மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி தலைமையில் அங்கு ஆய்வும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாவட்ட தீயணைப்பு அதிகாரி கொடுத்த வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்ட பின்பும் இன்னும் தடையில்லா சான்று காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments