தமிழகத்தில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்க சட்ட மசோதா தாக்கல்!
முதலமைச்சரை வேந்தராக கொண்டு தமிழகத்தில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழத்தை தவிர, அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பிற அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருந்துவரும் நிலையில், புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சித்தா, யுனானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் அனைத்தும் புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments