திரேஸ்புரம் மீனவப் பகுதியில் போக்குவரத்து இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் மீனவப் பகுதியில் போக்குவரத்து இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சாலையோர கடைகள் மற்றும் கட்டிடங்களை மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
அந்த வகையில் திரேஸ்புரத்தில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
Comments