முறையான சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை சுமார் 15 கி.மீ தூரம் தூளி கட்டி தூக்கிச் செல்லும் நிலை!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மலைக்கிராம மக்களுக்கு போதிய சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் கரடுமுரடான பாதையில் தூளி கட்டித் தூக்கிச் செல்லும் நிலையில் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
சங்கராபுரத்திலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திலும் கள்ளக்குறிச்சியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ள கல்வராயன்மலையைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களுக்கிடையே முறையான சாலை வசதிகள் இல்லாததால், அத்தியாவசியத் தேவைகளுக்கும் அவசரத் தேவைகளுக்கும் வெளியூர் செல்ல பெரிதும் அவதியடைந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
Comments